Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பமே அபாரம்.. 400 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்..!

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (09:31 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்ததால் முதலீட்டாளர்கள் அச்சத்துடன் இருந்த நிலையில் இன்று ஆரம்பமே 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. 
 
அதானி  விவகாரம், அமெரிக்க வங்கி திவால் ஆனது உள்பட ஒரு சில காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 458 புள்ளிகள்உயர்ந்து 58,080 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை 130 புள்ளிகள் உயர்ந்து 17,117 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
மீண்டும் 58 ஆயிரத்தை சென்செக்ஸ் கடந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே ரீதியில் சென்றால் பங்குச்சந்தை மீண்டும் 62,000ஐ தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments