Publish Date: Tue, 20 Apr 2021 (13:06 IST)
Updated Date: Tue, 20 Apr 2021 (14:07 IST)
காலை 10.30 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரத்து 261 புள்ளிகளில் வர்த்தகமாகியது.
தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி 98 புள்ளிகள் அதிகரித்து 14 ஆயிரத்து 457 புள்ளிகளில் வணிகமாகியது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.