Publish Date: Tue, 23 Nov 2021 (10:09 IST)
Updated Date: Tue, 23 Nov 2021 (10:55 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 653 புள்ளிகள் சரிந்து 57,812 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தை படிப்படியாகக் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை தாண்டியதால் பங்குசந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது பல மடங்கு லாபம் சம்பாதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையும் உயர்ந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றும் பங்கு சந்தை சற்று இறங்குமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 653 புள்ளிகள் சரிந்து 57,812 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 134 புள்ளிகள் குறைந்து 17,281 புள்ளியாக உள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு இன்று மிகப்பெரிய நஷ்டம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sugapriya Prakash
Publish Date: Tue, 23 Nov 2021 (10:09 IST)
Updated Date: Tue, 23 Nov 2021 (10:55 IST)