2 நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிவு.. என்ன ஆச்சு இந்திய பங்குச்சந்தைக்கு?

Siva
செவ்வாய், 9 டிசம்பர் 2025 (09:55 IST)
இந்திய பங்குச்சந்தையில் நேற்றைய சரிவை தொடர்ந்து இன்றும் முதலீட்டாளர்களுக்கு தொடர் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று மிகப்பெரிய அளவில் சந்தை சரிந்த நிலையில், முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ.7 லட்சம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகளுக்கு மேல் குறைந்த நிலையில், இன்றும் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்து முதலீட்டாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகளை கொடுத்துள்ளது.
 
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 620 புள்ளிகள் குறைந்து 84,460 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தை குறியீடான நிஃப்டியும் 194 புள்ளிகள் குறைந்து 25,765 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த தொடர்ச்சியான சரிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஒட்டுமொத்தமாக சரிவு காணப்பட்டாலும், நிப்டியில் உள்ள பாரதி ஏர்டெல் மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டுமே உயர்ந்து விற்பனையாகி வருகின்றன. இதை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து நிப்டி பங்குகளும் சரிவில் விற்பனையாகி வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments