Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி கவர்னர் முக்கிய அறிவிப்பு..!

Advertiesment
repo

Mahendran

, வெள்ளி, 7 ஜூன் 2024 (11:25 IST)
ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் குறித்து அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் ஏற்கனவே இருக்கும் 6.5% தொடரும் என்றும் அறிவித்துள்ளார் 
 
மேலும் இரண்டாவது ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கூறிய சக்தி காந்ததாஸ் உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்க ரிசர்வ் வங்கி தயார் ஆகி வருகிறது என்று தெரிவித்துள்ளார் 
 
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்
 
 
ரெப்போ வங்கி வட்டி விகிதம் எந்தவித மாற்றமின்றி 6.5% ஆகவே தொடரும் எனவும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹோம் லோன், வாகன கடன் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை இம்மாதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்றும் தொடர்ந்து 6.50 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுயேச்சை எம்பி.. சதமடித்த காங்கிரஸ் எம்பிக்கள் எண்ணிக்கை..!