Publish Date: Sun, 08 May 2022 (07:21 IST)
Updated Date: Sun, 08 May 2022 (07:35 IST)
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 110.85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100,94 எனவும் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் தாண்டி இருப்பது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
எனவே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
Sugapriya Prakash
Publish Date: Sun, 08 May 2022 (07:21 IST)
Updated Date: Sun, 08 May 2022 (07:35 IST)