Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்.. ஆனால்...

Siva
செவ்வாய், 1 ஜூலை 2025 (11:42 IST)
கடந்த வாரம் நன்றாக உயர்ந்திருந்த பங்குச்சந்தை, வாரத்தின் முதல் நாளான நேற்று திடீரென சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
 
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போதே ஏற்றத்தில் தான் இருந்தது. தற்போது, சென்செக்ஸ் 49 புள்ளிகள் உயர்ந்து, 83,656 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் உயர்ந்து, 25,529 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
பங்குச்சந்தை இன்று உயர்ந்தாலும், மிகவும் குறைந்த அளவே புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பதும், இதனால் மதியத்திற்கு மேல் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய பங்குச்சந்தையில் உயர்ந்த பங்குகள்: அப்போலோ ஹாஸ்பிடல், பாரதி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, HCL டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், இன்டஸ்இண்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, ஜியோ பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
இன்றைய பங்குச்சந்தையில் குறைந்த பங்குகள்: டெக் மகேந்திரா, டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டார், சிப்லா, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலைகள் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களாக சரிந்து வந்த தங்கம், இன்று ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஐந்தடுக்கு மாடி கட்டிடம் : அதிர்ச்சி வீடியோ வைரல்..!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் மின் இணைப்பு துண்டிப்பு: பின்னணி என்ன?

கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான், ஏடிஎம்.. இன்று முதல் என்னென்ன புதிய விதிகள்?

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments