Black Friday.. இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் பங்குச்சந்தையில் மோசமான சரிவு..!

Siva
வெள்ளி, 13 ஜூன் 2025 (09:57 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே நேற்றைய பங்குச்சந்தையில் சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்றும் அதே 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 835 புள்ளிகள் சரிந்து 80,854 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 245 புள்ளிகள் சரிந்து 24,630 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பெல், டாக்டர் ரெட்டி போன்ற ஒரு சில பங்குகள் மட்டுமே சிறிதளவு உயர்ந்துள்ளது என்பதும், மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் படுமோசமாக சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

மோடி எங்கள் டாடி.. நாங்கள் சொன்னால் கேட்பார்: ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் 78% SIR படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்!

கர்நாடக பள்ளி கழிவறையில் கேட்ட பயங்கர சத்தம்.. குண்டு வெடிப்பா என மக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments