3வது நாளாக உயரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
புதன், 8 அக்டோபர் 2025 (10:12 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்த நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுவது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தைத் வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ள நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 248 புள்ளிகள் உயர்ந்து, 82,175 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டி 59 புள்ளிகள் உயர்ந்து, 25,156 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, டைட்டன் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டிகோ, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அனைத்து தேர்தல்களிலும் புதிய நடைமுறைகள்! தேர்தல் ஆணையம் புதிய அதிரடி!

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: முன்பதிவு டிக்கெட்டின் தேதியை இனி ஆன்லைனில் மாற்றலாம்!

6 வயது மகளை லட்சுமி தேவியாக பூஜை செய்து வழிபட்ட பெற்றோர்.. ஆதரவும் எதிர்ப்பும்..!

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

10 மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழை.. குடையில்லாமல் வெளியே செல்லாதீர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments