Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

Siva
திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:04 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு காரணமாக, இன்று பிளாக் மண்டே என மாற வாய்ப்பு இருப்பதாகவும், 37 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் பங்குச்சந்தை சரியலாம் என்றும் கூறப்பட்டது.
 
அது உண்மை எனும் வகையில், இந்திய பங்குச்சந்தை சுமார் 3,000 புள்ளிகள் வரை சரிந்து, சென்செக்ஸ் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை 2,765 புள்ளிகள் சரிந்து, 72,710 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 900 புள்ளிகள் 22,000 அளவில் வர்த்தகம் செய்கிறது.
 
சமீப காலமாக இவ்வளவு அதிகமாக இந்திய பங்குச்சந்தை சரிந்ததில்லை. இருப்பினும், இது நிரந்தர சரிவல்ல; விரைவில் மீண்டும் உயரும் என நம்பிக்கை இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட அனைத்து பங்குகளுமே மிக மோசமாக சரிந்துள்ளன.  சில முக்கிய  நிறுவனங்கள் 5% முதல் 6% வரை சரிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments