Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்களில் 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?

Siva
செவ்வாய், 18 மார்ச் 2025 (12:06 IST)
இந்திய பங்குச்சந்தை நேற்றும் இன்றும் உயர்ந்து வருவது, முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை தந்துள்ள நிலையில், பழைய நிலைக்கு மீண்டும் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்  200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், இன்று 800 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 1,000 புள்ளிகள் மேல் உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய பங்குச்சந்தையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 887 புள்ளிகள் உயர்ந்து 75,052 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 263 புள்ளிகள் உயர்ந்து 22,777 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், பஜாஜ் உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதே போல் பங்குச்சந்தை வளர்ச்சி தொடர்ந்து நீடித்தால், சென்செக்ஸ் மீண்டும் 80,000 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக, பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் ரெய்டு! கோடிக்கணக்கில் சிக்கிய போலி தயாரிப்புகள்?

அவுரங்கசீப் கல்லறையை இடித்தால் ரூ.23 லட்சம் பரிசு.. இந்து அமைப்பு அதிர்ச்சி அறிவிப்பு..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்.. 100 பேர் பலி..!

முதல்முறையாக ரூ.66,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயருமா?

முதல்வர் வீட்டுக்கு அண்ணாமலை வரட்டும், என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்: அமைச்சர் ரகுபதி

அடுத்த கட்டுரையில்
Show comments