2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

Siva
வெள்ளி, 9 மே 2025 (09:26 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக நேற்று (8-5-2025) மதியம் கராச்சி பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
 
இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும், சிறிய அளவில் சரிவை சந்தித்து வருகிறது.
 
நேற்று மட்டும் சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் சரிந்தது. இன்று அதிகாலை வெளியாகியுள்ள தகவலின்படி, 500க்கும் அதிகமான புள்ளிகள் மேலும் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இன்று சென்செக்ஸ் 544 புள்ளிகள் சரிந்து, 79,084 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 83 புள்ளிகள் சரிந்து, 24,130 புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
 
 
இன்றைய பங்குச்சந்தையில் கீழ்க்கண்ட பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன:
 
ஆசியன் பெயிண்ட்
 
டாக்டர் ரெட்டி
 
கோடக் மகேந்திரா வங்கி
 
எல் அண்ட் டி
 
டாடா மோட்டார்ஸ்
 
டைட்டன்
 
இதேவேளை, பின்வரும் பங்குகள் சரிவடைந்துள்ளன:
 
அப்போலோ ஹாஸ்பிடல்
 
ஆக்சிஸ் வங்கி
 
பஜாஜ் பைனான்ஸ்
 
பாரதி ஏர்டெல்
 
சிப்லா
 
HDFC வங்கி
 
ஐசிஐசிஐ வங்கி
 
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
 
ஐடிசி
 
இன்போசிஸ்
 
ஸ்டேட் வங்கி
 
டாடா ஸ்டீல்
 
 
இந்த நிலவரம் தொடரும் போதும், இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் சரிவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments