தங்கம் விலை 176 ரூபாய் உயர்வு – மக்கள் அதிருப்தி !

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (09:36 IST)
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்துள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம் உற்பத்தியில் முன்னிலையில் இல்லாவிட்டாலும் தங்கத்தை நுகர்வதில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா இருந்து வருகிறது. அத்தகைய இந்தியாவில் 2018-ம் ஆண்டு குறைந்துள்ள தங்க இறக்குமதியும, அதிகரித்து வரும் விலையும் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனாலும் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் சென்னையில் ஒரே நாளில் பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 24,366 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்னும் சில நாள்களில் அட்சயதிருதியை வர இருப்பதால் மக்கள் தங்கம் வாங்க ஆவலாக உள்ளனர். இதனால் தங்கத்தின் விலை மேலும் உயரலாம் என வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் தங்கம் வாங்கும் ஆசையில் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments