Publish Date: Sat, 23 Oct 2021 (10:22 IST)
Updated Date: Sat, 23 Oct 2021 (12:27 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,515க்கும் ஒரு சவரன் ரூ.36,120க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.