Publish Date: Tue, 19 Oct 2021 (15:45 IST)
Updated Date: Tue, 19 Oct 2021 (15:55 IST)
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35,872க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.4,484க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசு உயர்ந்து ரூ.68.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.