Publish Date: Fri, 30 Jul 2021 (15:04 IST)
Updated Date: Fri, 30 Jul 2021 (15:14 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும், இறங்கியும் வரும் நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,552 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.28 ஆக உயர்ந்து, ரூ.4,569 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.