Publish Date: Wed, 01 Jun 2022 (10:16 IST)
Updated Date: Wed, 01 Jun 2022 (10:22 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.37,920-க்கு விற்பனை.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67-க்கு விற்பனை ஆகிறது.