Publish Date: Sat, 07 Aug 2021 (10:42 IST)
Updated Date: Sat, 07 Aug 2021 (11:32 IST)
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.488 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,440க்கும் சவரன் ரூ.35,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.70.20க்கு விற்பனையாகிறது.