Publish Date: Sat, 16 Jan 2021 (12:14 IST)
Updated Date: Sat, 16 Jan 2021 (12:08 IST)
ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களி போல இன்றும் விலை குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று விலை குறைந்துள்ளது. ஆம், தங்கம் விலை கடந்த 7 ஆம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்துள்ளது. ஆம், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ரூ.4,608க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனையாகிறது.