தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டாலும் வெள்ளியில் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் வெள்ளி விற்பனை ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 8,215 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சென்னையில் ரூபாய் 65,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,961 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,688 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 110.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 110,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது