Publish Date: Wed, 17 Feb 2021 (10:51 IST)
Updated Date: Wed, 17 Feb 2021 (11:40 IST)
தங்கம் விலை அதிரடியாக இன்று சவரனுக்கு ரூ.384 குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி இரண்டரை சதவீதம் குறைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக தங்கத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவருகிறது.
அதன்படி தற்போது, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,416-க்கு விற்பனை ஆகிறது.
Sugapriya Prakash
Publish Date: Wed, 17 Feb 2021 (10:51 IST)
Updated Date: Wed, 17 Feb 2021 (11:40 IST)