Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

Mahendran
சனி, 12 ஏப்ரல் 2025 (10:49 IST)
தங்கத்தின் விலை சென்னையில் இன்று மீண்டும் உயர்ந்தது. ஒரு சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.70,160-க்கும், ஒரு கிராம் ரூ.8,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் அதிவேகமாக விலை ஏறி, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் விலை ஒரு லட்சத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறப்படுகிறது.
 
ஏப்.9 முதல் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த புதன் அன்று மட்டும் ரூ.1,480 உயர்ந்து சவரனுக்கு ரூ.67,280-ஆக விற்பனையானது. அதற்குப் பிறகு வியாழனன்று ரூ.1,200 உயர்வும், வெள்ளிக்கிழமை ரூ.1,480 உயர்வும் பதிவாகின. நான்கு நாள்களில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ.4,365 உயர்ந்துள்ளது.
 
வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. இன்று காலை  ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ  ரூ.1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
தங்க, வெள்ளி விலைகள் இடைவிடாத உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விரைவில் விலை சீராகுமா அல்லது இன்னும் உயருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

தட்கல் முன்பதிவு ரயில் டிக்கெட் நேரம் மாற்றமா? ஐஆர்சிடிசி விளக்கம்..!

எம்ஜிஆர் அதிமுக.. புதிய கட்சி தொடங்குகிறாரா ஓ பன்னீர்செல்வம்?

வெளிநாட்டில் பிச்சையெடுக்கும் பாகிஸ்தானியர்கள்.. பாஸ்போர்ட்டை முடக்கி நடவடிக்கை..!

திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.. கூட்டணி குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments