கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ₹9,700-க்கு விற்பனையான நிலையில், நேற்று அதன் விலை ₹10,150-ஐ எட்டியது. இது, ஒரே வாரத்தில் ஒரு கிராமுக்கு சுமார் ₹500 அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
இன்று சென்னையில் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் நேற்றைய விலையான ₹10,150-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும், தங்கம் விலை இன்னும் அதிகமாக உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, இன்னும் சில மாதங்களில் ஒரு கிராம் தங்கம் ₹1 லட்சம் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல், தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களை உற்சாகப்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விலை விபரங்கள்:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,150
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,150
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 81,200
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,072
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 88,576
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 140.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 140,000. 00