இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் திங்கட்கிழமை சரிவில் தொடங்கி நான்கு நாட்களாக தொடர்ச்சியாக சரிவில் இருந்த நிலையில், இன்றும் பங்குச் சந்தை சரிந்து, முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 647 புள்ளிகள் சரிந்து 79,414 என்ற புள்ளியில் இன்று வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. அதே போல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 260 புள்ளிகள் சரிந்து 24,150 என்ற புள்ளியில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக பங்குச் சந்தை தொடர்ச்சியாக சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நஷ்டம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர் போன்ற பங்குகள் உயர்ந்துள்ளதோடு, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல் போன்ற பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பங்குச் சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்றத்தை விட இறக்கம் அதிகமாக இருக்கும் என்றும், எனவே இந்த இறக்கத்தை பயன்படுத்தி புதிதாக முதலீடு செய்ய விரும்புவோர், நல்ல பங்குகளில் முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனை பெற்ற பிறகு முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.