Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான ஃபுரூட் கேக் செய்வது எப்படி?

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (16:18 IST)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கியமான உணவு பொருளான சுவையான ஃபுரூட் கேக் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். 

 
தேவையான பொருட்கள்:
கேரமல் செய்ய: 
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
கேக் செய்ய தேவையான பொருட்கள்:
மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
பழங்கள் - 3 கப்
 
கேரமல் செய்முறை :
* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.
* சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.
 
கேக் செய்முறை :
* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.
* பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும். பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும். இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.
* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும். சுவையான ஃபுரூட் கேக் தயார்.

தொடர்புடைய செய்திகள்

ஆஸ்துமா நோய் ஏற்படுவது ஏன்? குணப்படுத்த என்ன வழிகள்?

வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்?

நீண்டநேரம் உட்கார்ந்து வேலை பார்த்தால் வரும் இடுப்புவலி.. நிவாரணம் என்ன?

வாயுக்கோளாறு ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன?

ஆசனவாயில் வெள்ளை புழுக்கள் பிரச்சனைக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments