துவையல் என்றால் மிகவும் எளிதான மற்றும் சுவையான இணை உணவாகும். துவையல் செய்வதில் ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனமாக பார்க்க வேண்டும். நாம் சேர்க்கும் பொருட்களின் அளவுதான்.
வெறும் தேங்காய், உடைத்த கடலை சிறிது, உப்பு வைத்து தேங்காய் துவையல் அரைத்தால் காரக்குழம்பிற்கு அருமையாக இருக்கும்.
காரமும், புளிப்பும் சரியாக வைத்து அரைத்தால் புதினாத் துவலையலை இட்லி, தோசைக்கும் வைத்துக் கொள்ளலாம், புளி சாதத்திற்கும், பிரியாணிக்கும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது நாம் மறந்து வரும் சில துவையல்கள் என்னவென்றால், பிரண்டை துவையல், தூதுவளைத் துவையல் போன்ற மருந்துத் துவையல்களை.
துவையலில் சேர்க்க வேண்டிய பொருட்களை சரியான அளவில் சேர்த்தால்தான் அதன் உண்மையான சுவை கிடைக்கும்.