Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்...சிவராத்திரியை முன்னிட்டு விஷேச அபிஷேகங்கள்

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (21:45 IST)
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு விஷேச அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்களுடன் பூஜைகள் செய்யப்பட்டன.

கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று மாத சிவராத்திரி மற்றும் கார்த்திகை மாத பிரதோஷ நிகழ்ச்சியும் இணைந்து இன்று ஒன்றாக வருவதையொட்டி, ஈஸ்வரனுக்கு முன்னர் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு விஷேச அபிஷேகங்களும், பலவகை திரவியங்களோடு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, நாக ஆரத்திகளுடன் மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வருடத்திற்கு இரண்டு முறை தான் பிரதோஷமும், சிவராத்திரியும் ஒன்றாக வரும் என்பதாலும், மாசி மாதத்தின் பிறகு இந்த மாதம் இந்த அபூர்வ நிகழ்வு வந்ததையடுத்து இன்று பக்தர்கள் கூட்டம் குவிந்தது.

இந்நிகழ்ச்சியில், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருகம்புற்களை நந்தி எம்பெருமானுக்கு படைத்து நந்தியின் அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், இந்து சமய அறநிலையத்தினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – கும்பம் | Kumbam 2025 Rasipalan

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – மகரம் | Magaram 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(17.12.2024)!

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் சிறப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments