Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகா சிவராத்திரி பூஜையில் சிவபெருமானுக்கு உகந்த வில்வம்!

மகா சிவராத்திரி பூஜையில் சிவபெருமானுக்கு உகந்த வில்வம்!
சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன.  வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும்  குறிப்பனவாகவும் விளங்குகின்றன.

 
தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம்  சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
 
* சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
 
* லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் - நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
 
* உணவு நிவேதித்தல் - நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
 
* தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
 
* எண்ணெய் விளக்கேற்றுதல் - ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
 
* வெற்றிலை அளித்தல் - உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
 
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன. ‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து  உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க  வே‌ண்டு‌ம்.
 
ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாயநம' என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும்  பூஜிக்கலாம்.
 
சிவனுக்கு உகந்த வில்வம்
 
வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று  இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும்  உள்ளன.
 
பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்.  வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகா சிவராத்திரியின் போது விரதமிருந்து கண் விழிப்பது ஏன்?