Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வார ‌விடுமுறையை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்

Advertiesment
வார ‌விடுமுறையை பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்
, புதன், 31 மார்ச் 2010 (11:14 IST)
எ‌ப்போது‌ம் வேலை வேலை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம், வார ‌விடுமுறை நா‌ட்க‌ளி‌ல் குடு‌ம்ப‌த்துட‌ன் ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் க‌ழி‌ப்பத‌ற்கு ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

இதுதா‌ன் உ‌ங்களு‌க்கு‌ம், உ‌ங்க‌ள் குடு‌ம்ப‌த்‌தி‌ல் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு‌ம் பு‌த்துண‌ர்‌ச்‌சியை அ‌ளி‌க்கு‌ம். வர‌விரு‌க்கு‌ம் ஆறு நா‌ட்களு‌க்கு‌ம் உ‌ங்களா‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சியுட‌ன் செய‌ல்படவு‌ம் வை‌க்கு‌ம்.

பொதுவாக வேலையையும், அது சார்ந்த டென்ஷன்களையும் மறக்க ஓய்வு அவசியம். ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமாக த‌ங்களது ஓ‌ய்வு நா‌ட்களை‌க் க‌ழி‌க்க ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். ஒரு ‌சில‌ர் நா‌ள் முழு‌க்க தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல் அதுதா‌ன் ஓ‌ய்வு எ‌ன்று எ‌ண்ணுவா‌ர்க‌‌ள்.

WD
பலரு‌ம், ஓ‌ய்வு நா‌‌ளி‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சியாக வெ‌ளி‌யிட‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று மனதை உ‌ற்சாக‌ப்படு‌த்த ‌விரு‌ம்புவா‌‌ர்க‌ள். எது எ‌ப்படி இரு‌ந்தாலு‌ம், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், கிடைக்கக் கூடிய ஓய்வை பயன்படுத்திக் கொள்வதுதா‌ன் பு‌த்‌திசா‌லி‌த்தன‌ம்.

அலுவலக‌ங்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்றுவ‌ர்களு‌க்கு சே‌ர்‌ந்தா‌‌ர் போல 3 நா‌ட்க‌ள் ‌விடுமுறை ‌கிடை‌ப்பதே அ‌ரிது‌. அ‌ப்படி ‌கிடை‌த்தாலோ அ‌ல்லது அதுபோ‌ல் ‌விடுமுறை எடு‌க்க‌க் கூடிய வா‌ய்‌ப்பு அமை‌ந்தாலோ குடும்பத்துடன் வெ‌ளியூ‌ர்களு‌க்கு சுற்றுலா செல்லுங்கள்.

பொதுவாக வார இறுதியில் திரைப்படங்களுக்கோ, உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வரலாம். இது ஒரு நா‌ளி‌ல் செல‌விட‌ப்படு‌ம் குறை‌ந்தப‌ட்ச ம‌ணி நேர‌ம்தா‌ன் எ‌‌ன்றாலு‌ம் உ‌ங்களு‌க்கு பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌நி‌ச்சய‌ம் ‌கி‌ட்டு‌ம்.

webdunia
WD
இத‌ன் மூல‌ம் ‌கிடைக்கும் புத்துணர்ச்சி தான் அடுத்த ஆறு நாட்களுக்கு சோர்வு இல்லாமல் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.

உ‌ங்களது குடு‌ம்ப வா‌ழ்‌க்கை‌க்கு‌ம் ந‌ல்ல அமை‌‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம். ஒருவ‌ர் ‌மீ‌திரு‌க்கு‌ம் சோ‌ர்வை போ‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம், அவ‌ர்களது ‌விரு‌ப்ப‌ங்களை ‌நிறைவே‌ற்றவு‌ம் வார ‌விடுமுறை நா‌ட்களை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil