Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழகும் வரை காத்திருங்கள்!

Advertiesment
பழகும் வரை காத்திருங்கள்!
, சனி, 29 ஜனவரி 2011 (17:41 IST)
மரத்தில் பழம் தொங்குகிறதே என்று உடனே அதைப் பறித்துவிடக்கூடாது. அப்படி பறித்து சாப்பிட்டால், அது காயாக, புளிப்பாக இருக்கலாம். ஆனால் காத்திருந்து, நன்றாக பகுத்துவிட்டது எனத் தெரிந்தவுடன் அதனை தொட்டாலே உங்கள் கைகளில் விழுந்துவிடும். அதற்குப்பின் அந்தப் பழத்தின் ருசியே அலாதியாகத்தான் இருக்கும்.

பெண்களும் ஒரு பழம் போன்றவர்களே!

ஆரம்பத்திலேயே செக்ஸ் பெற அவர்களிடம் அவசரம் காட்டாமல் ஆண்கள் காத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

கொஞ்சம் பேச்சு வளர்ந்து தொடவும், முத்தமிடவும் விரும்புகிறீர்கள் என்றாலும் அதற்கும் காத்திருக்க வேண்டும்.

பெண்களுக்கும் ஆசை, ஆர்வம் உண்டு.

ஆனால் ஆண்களுக்கு அது தானாக கனியும் வரை காத்திருக்கும் பொறுமை மட்டுமே வேண்டும்.

சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணைத் தொட்டுப் பேசுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்தப் பெண்ணின் செய்கையில் இருந்தே கனி எத்தனை தூரம் பழுத்திருக்கிறது என்பதனை கண்டுகொள்ளலாம்.

நீங்கள் தொட்டவுடன், "என்ன, பழக்கமெல்லாம் மாறுது, ரொம்பவும் தைரியம் வந்திடுச்சா... இதெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதே மவனே..." என்பது போல கிண்டலாகவோ, பொய்க் கோபத்துடனோ சொல்கிறாள் என்றால், கனி தேவையான அளவு பழுத்துவிட்டது என அர்த்தம்.

நீங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையினை தொடரலாம் என்பதுதான் அதன் அர்த்தம்.

கை பட்டவுடன் விலகி ஓடினாலோ, அல்லது கோபத்துடன் தள்ளிவிட்டாலோ, இன்னும் கொஞ்சநாள் காத்திருக்க வேண்டும் என அர்த்தம். மேற்கொண்டு ஏதாவது நடவடிக்கையினை நீங்கள் தொடர்ந்தால் காதலே காணாமல் போய்விடலாம்.

இதைவிட, கை பட்டவுடன் ஏதோ ஒரு மாபெரும் குற்றம் நடந்ததுபோல் காச் மூச் என கத்தி, மிக மோசமான வார்த்தைகளால் தன்மானத்தை பாதிக்கும் அளவு திட்டினால், உடனடியாக குறைந்தது ஒரு மாதமாவது கண்ணுக்குத் தட்டுப்படக்கூடாது என்று அர்த்தம். காதல் இன்னும் காயாகக்கூட மாறவில்லை என்பதால், இப்போது நீங்கள் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே காதல் தொடரும், இல்லையெனில் காதல் காலியாகிவிட்டது என அர்த்தம்.

நாம் சொல்லியிருக்கும் வழிமுறைகளை மட்டும் மிகச்சரியாக, தெளிவாகப் பின்பற்றினால் போதும், கண்டிப்பாக பெண்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியும். இவற்றை அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடைப்பிடிக்க வேண்டும் என அர்த்தமில்லை.

அதே நேரம் ஆளுக்கு ஏற்ற மாதிரி கூட்டிக்குறைத்து நடந்துகொண்டு வெற்றி பெறுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.

- டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ்

Share this Story:

Follow Webdunia tamil