காதலிப்பதை விட, காதலிப்பவரிடம் சென்று நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறுவதுதான் மிகவும் கடினம். அதை செய்து விட்டால் காதலில் நீங்கள் பாதிக் கிணற்றை தாண்டி விட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.
சரி நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலைச் சொல்ல எத்தனையோ வழிகள் உள்ளன. தற்போதெல்லாம் செல்போன் இருப்பதால் எளிதாக காதலைச் சொல்லும் வேலை நடந்து விடுகிறது.
ஆனாலும் எத்தனை பேருக்குத்தான் செல்பேசியில் தொடர்பு கொண்டு காதலைச் சொல்ல தைரியம் இருக்கும். அப்படி தைரியம் இல்லாதவர்கள் சில குறுந்தகவல்களை அனுப்பி அவர்களது மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
சில நகைச்சுவையான எஸ்.எம்.எஸ்.களை அனுப்பி வையுங்கள். பிறகு பாருங்கள் அதற்கான பதில் எப்படி இருக்கிறது என்று... இவை எல்லாம் சில காதலர்கள் பயன்படுத்திய குறுந்தகவல்கள்தான். 1.
ஒரு பையனும், பெண்ணும் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். அப்போது பையன் ஒளிந்து கொள்கிறான், பெண் தேடுகிறாள். பெண் தேடிக் கொண்டிருக்கும் போது அந்த பையன் செல்பேசியில் பெண்ணை அழைத்துச் சொல்கிறான்.ஒரு வேளை நீ என்னைக் கண்டுபிடித்து விட்டால் நீ என்னைக் காதலிக்கிறாய். நானும் உன்னை காதலிக்கிறேன் என்று அர்த்தம். ஆனால் உன்னால் என்னைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் பரவாயில்லை.. நான் காரின் பின்புறத்தில் தான் ஒளிந்திருக்கிறேன். வா வந்து என்னை கண்டுபிடி.2.
சிலர் நமக்கு அழும் கண்ணீரையும், சிரிக்கும் புன்னகையையும் கொடுப்பார்கள். ஆனால் உன்னால் மட்டுமே அழும் புன்னகையையும், சிரிக்கும் கண்ணீரையும் அளிக்க முடிகிறது.3.
என்னிடம் இருந்த இதயம் தற்போது உன்னிடம் சென்றுவிட்டது. பத்திரமாக பார்த்துக் கொள் இரண்டு இதயங்களையும், இரண்டையும் உன்னால் பார்த்துக் கொள்ள முடியாவிட்டால் உன்னுடையதை என்னிடம் கொடு.4.
ஐ லவ் ஒய், ஐ லவ் ஓ, ஐ லவ் யூ. 5.
இந்த எஸ்.எம்.எஸ்ஸை நீ படித்தால் நீ என்னை காதலிக்கிறாய் என்று அர்த்தம். இல்லை அழித்துவிட்டால் நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம், இதனை பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால், என் நினைவால் வாடுகிறாய் என்று அர்த்தம், இதற்கு பதில் அனுப்பினால் மேற்கூறிய அனைத்தும் உண்மை என்று அர்த்தம், ஒரு வேளை இதனை மறுத்தால் நீ எனக்கு சொந்தம் என்று அர்த்தம். இதில் எதைச் செய்ய போகிறாய்?