காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றாமலிருக்க ஒரு சில விஷயங்களை காதலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், அதனை பேசி சுமூகமாக போக்கிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
குறிப்புகள்
உங்களைப் பற்றியும், உங்களது நட்பு வட்டம் பற்றியும் நீங்கள் காதலிப்பவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதைப் போல காதலிப்பவருடனும் நேரத்தைப் போக்குங்கள்.காதலிப்பவரின் மீது அதிக உரிமை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதீர்கள். அதற்காக எந்த உரிமையும் இல்லை என்பது போலவும் பேசாதீர்கள். ஒருவரைக் காதலிப்பது என்ற முடிவு எடுப்பதற்கு முன்பு அவரைப் பற்றிய முழுமையானத் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். எல்லாம் தெரிந்து கொண்டு வருவதல்ல காதல் என்று வியாக்யானம் பேசாதீர்கள். காதல் என்பது வாழ்க்கை என நினைப்பவர்கள் ஒரு வரைப் பற்றி முழுமையாக புரிந்து கொண்டுதான் காதலிப்பார்கள். நன்கு சிந்தியுங்கள் காதலிப்பதை தெரிவிக்கும் முன்பு. ஆனால் காதலித்த பின் எந்த காரணத்திற்காகவும் அதை மறுபரிசீலனை செய்யக் கூடாது. இருவரும் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை ஒருவரது அனுமதி இன்றி ஒருவர் யாரிடமும் சொல்லவும் கூடாது, ஒரு செயலை செய்யவும் கூடாது.மறைக்க வேண்டிய ரகசியங்களை காதலிப்பவரிடம் இருந்து மறைக்க வேண்டியதும் கடமைதான்.