பிரிந்திருந்தாலும் அன்பு கூடும்
, திங்கள், 23 நவம்பர் 2009 (15:09 IST)
சிலர் மாய்ந்து மாய்ந்து காதலித்து திருமணம் செய்திருப்பார்கள், சிலர் தனது பெற்றோரால் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு காதலர்களாக மாறி காதல் வாழ்க்கையை ருசித்திருப்பார்கள். இதே நிலை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நீடிக்கிறதா என்றால் அதுதான் இல்லை. திருமணமான புதிதில் ஈருயிர், ஓருடலாக வாழ்வார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல அவர்களுக்குள்ளான நெருக்கம் மாறி, ஏரே ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் (சில வீடுகளில் எதிரிகளாகக் கூட) மாறிவிடுகிறார்கள்.இதற்கு, அப்போதிருந்த ஒரு பிரிவு ஏக்கம் என்பதும் ஒரு காரணமாகும். அதாவது இருவரும் சந்தித்துக் கொள்வது சில மணி நேரங்கள்தான் என்பதால் ஏற்பட்ட ஈர்ப்பாகவோ, எப்போதாவது மட்டுமே பார்க்க முடியும் என்ற விருப்பமாகவோக் கூட இருக்கலாம்.ஒரே வீட்டில் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்வதால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் ஆர்வம் குறைந்து போகிறது. எனவே, தம்பதிகள் ஓரிரு வாரங்கள் தனித்தனியாக பிரிந்திருப்பது நல்லது என்று மனோரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரிந்திருப்பது என்றால் தாங்களாகவே முடிவெடுத்து ஒரு சில நாட்கள் தாய் வீட்டிலோ, உறவினர்கள் வீட்டிற்கோ சென்று தங்கியிருப்பது. இப்படி செய்வதால் அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல ஆசையையும் கூட்டும் என்கிறது சில பட்சிகள்.
அதாவது மனைவியோ அல்லது கணவனோ ஒரு வாரம் வீட்டில் இல்லாமல் போகும் போதுதான் அவர்களது பிரிவையும், அவர்களது அவசியத்தையும் துணை உணர வாய்ப்பு கிடைக்கும். தம்பதிகள் ஒன்று கலந்து பேசி இந்த முடிவினை எடுக்க வேண்டும். இது சற்று சிரமமாகக் கூட இருக்கலாம். ஒரு வாரத்திற்கு ஒருவரது முகத்தை மற்றொருவர் பார்க்கவேக் கூடாது. இப்படி இருந்தால் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என்பதும் ஒரு காரணம்.மேலும், ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள். இருவரும்.. பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதே நிலையை அவ்வப்போது நீடிக்கக் கூடாது. அதாவது, மனைவி அடிக்கடி அம்மா வீட்டிற்குச் செல்வதையும், கணவன் வெளியூருக்கு அடிக்கடி செல்வதையும் எந்தத் துணையும் விரும்புவதில்லை. இந்த நடவடிக்கை தனது துணையின் மீது ஒரு நிரந்தரமான வெறுப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்பதை உணருங்கள்.எனவே வருடத்தில் ஒரு முறை இப்படி பிரிந்திருந்தால் உங்கள் இளமையான காதல் வாழ்க்கை மீண்டும் துவங்கலாம்....