எப்போதும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்காமல் குடும்பத்திற்கும் சிறிது நேரத்தை செலவிடுங்கள். இது உங்களது வாழ்க்கைக்கு அடிப்படையான நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
காதலிக்கும் போது காதலியுடன் அதிக நேரத்தை செலவிடும் காதலன், திருமணமான பிறகு தன் காதல் மனைவியுடன் பேசுவதற்கு கூட அலுத்துக் கொள்வது உங்களது காதலை வலுவிழக்கச் செய்யும்.
காதலர்கள் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதை விட, தம்பதிகள் தங்களுக்குள் மனம் விட்டுப் பேசுவதுதான் மிகவும் அவசியமாகிறது. இல்லை என்றால் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பிரச்சினை ஏற்பட்டு அது மோதலாக மாறும்.
ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதுதான் நல்லது. காதல் என்பது எப்படி உருவானதோ அப்படியே வாழ்க்கையையும் நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
காதலிக்கும் போது சிரித்து சிரித்து பேசியவர், தற்போது சிடுமூஞ்சியாக இருப்பதற்குக் காரணம்... குடும்பத்தில் நிலவும் சூழ்நிலைகளாகவும் இருக்கலாம். எனவே, குடும்பப் பிரச்சினைகளை மட்டுமே பேசாமல் நல்ல விஷயங்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.