காதலில் முக்கியப் பிரச்சினையே, ஒரு காரியத்தில் யார் தவறு செய்தது என்பதை ஒப்புக் கொள்வதில்தான் ஏற்படுகிறது.
அதாவது தவறு ஏற்பட்டுவிட்டது. அதற்கு யார் காரணம் என்று மாய்ந்து மாய்ந்து சண்டை போட்டுக் கொள்வதில் பலனில்லை. தாமாக முன் வந்து ஒரு தவறை செய்துவிட்டதற்கு பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எந்த தவறுக்கும் மற்றவர் மீது பழி போடுவது வேண்டாம். அது நாம் செய்த தவறை இரட்டிப்பாக்குவதற்கான வழியாகிவிடும்.
தவறுக்கு பொறுப்பேற்கும் குணத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்தையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் சண்டை போடக் கூடாது. நேரிடையாகவே எதையும் பேச வேண்டும்.
காதலிப்பவரது கருத்துக்கும் மரியாதைக் கொடுக்க வேண்டும். அவரது இடத்தில் இருந்து அவர் செய்தது நியாயமா, நாம் செய்தது நியாயமா என்பதை சிந்தித்துப் பாருங்ள். எப்போதும் எதிர்வாதம் செய்வது சண்டையை மட்டுமேப் பெரிதாக்கும்.
காதலரின் பிரச்சினையை உங்களது பிரச்சினையாக நினைத்து அதற்கான முடிவை காண முயற்சியுங்கள். இது உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.தவறு நேர்ந்துவிட்டது, அது என் கவனக்குறைவால் நேரிட்டது என்று நேரிடையாகக் கூறிவிடலாம். அதைவிடுத்து தவறை மறைக்கவோ, மறுக்கவோ முயன்றால், பிரச்சினை பெரிதாகுமேத் தவிர நல்ல வழி கிடைக்காது.