தம்பதியர் இருவரும் வெளியில் செல்லும்போதோ... அல்லது விருந்து, விசேஷம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதோ அல்லது மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதோ கணவர் வேறொரு பெண்ணை பார்த்தால் அதை தவறாக நினைக்க வேண்டாம்.
இது மிகவும் இயல்பான விஷயம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஒரு பெரிய விஷயமாக நினைக்காமல் விட்டு விட வேண்டும்.
சாதாரணமாக ஒருவரை பார்ப்பதற்கும், தவறாக பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அதை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்காக அவரோடு சண்டை பிடிப்பது சில நாட்களுக்கு பேசாமல் இருப்பது போன்றவற்றை பெண்கள் செய்யக் கூடும். இதற்குப் பெயர் பொசசிவ் என்று கூறுவார்கள்.
ஆனால் பொசசிவ் என்பதெல்லாம் ஒரு சில விஷயங்களில் மட்டுமே ரசிக்கக் கூடியதாக இருக்கும். இந்த நிலைமை முற்றினால் இருவருக்குள்ளும் பெரும் பிரச்சினை ஏற்படலாம். எனவே, தனது கணவர் ஒரு பெண்ணோடு பேசுவதோ அல்லது பார்ப்பதோக் கூடத் தவறு என்று முட்டுக்கட்டைப் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.