எப்போதாவது காதலரை சந்திக்கும் நபர்களுக்கு, சில சமயம் பதற்றமாக இருக்கும். எப்படி பேசுவது, என்ன பேசுவது, எப்படி நடந்து கொள்வது என்பதில் தயக்கம் ஏற்படும்.
ஆனால், பதற்றமோ, தயக்கமோ தேவையில்லை. நீங்கள் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்லவில்லை. பயப்படுவதற்கு. காதலரை சந்திக்கச் செல்கிறீர்கள். இங்கு பதற்றமோ, தயக்கமோ இருப்பின் உங்களை பயந்தாங்கொள்ளியாகவோ, தவறான நபராகேவா சந்தேகிக்க இடம் உண்டாகிவிடும்.
எனவே, காதலரை சந்திக்க போகும் போது சிரித்த முகத்துடனும், உற்சாகத்துடனும் செல்லுங்கள். மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசுக்ள். எந்த டென்ஷன், கவலை இருந்தாலும் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாதீர்கள்.
எப்போதும் உங்கள் நண்பர்களைப் பற்றியோ, தற்பெருமையோ அடித்துக் கொள்ளாதீர்கள். பொதுவாக விஷயங்களையும், உங்கள் காதலரைத் தொடர்புபடுத்தும் அல்லது அவர் விரும்பும் விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள்.
காதலியிடம் தானே என்று பொய்யாக எதையும் கூறாதீர்கள். பொய் உங்கள் காதலையே கேள்விக்குறியாக்கிவிடும்.
உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களைப் பற்றிய தவறான விமர்சனங்களை நிச்சயமாகத் தவிர்த்துவிடுங்கள். இது பிற்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.வெகு நாட்கள் கழித்து உங்கள் காதலரை சந்திக்கச் செல்பவராக இருப்பின், சிறிய பரிசுப் பொருள் ஏதேனும் ஒன்றை வாங்கிச் செல்லுங்கள். இல்லாவிடில் பூக்களையாவது பரிசாக அளியுங்கள். அந்த நேரத்தை உங்களுக்கு பூரிப்பான நேரமாக மாற்றும் தன்மை பூக்களுக்கு உண்டு.