பொதுவாக சண்டை போட்டுக் கொண்டு, கத்திக் கொண்டு, புலம்பிக் கொண்டு இருப்பவள் மனைவியாகத்தான் இருக்கும். இவர்கள்தான் மாற வேண்டும் என்று பொதுவாக எல்லோரும் நினைப்பார்கள். ஏன் அப்படிப்பட்ட மனைவிகளே தான் இதுபோன்று நடந்து கொள்வது தவறு என்று வருந்துவார்கள்.
ஆனால் உண்மையில் மாற வேண்டியது கணவன்தான். அதாவது ஆண்கள்தான்.
மனைவிக்காக சிறிது நேரத்தை கணவன்மார்கள் ஒதுக்க வேண்டும். பெண்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். பெண்கள் சின்னச் சின்ன விஷயங்களில் சொல்லும் வார்த்தைகளை காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் உணர்வுகளையும், வேலைப் பளுவையும் புரிந்து கொள்ளுங்கள்.
இதில் எதையாவது ஒன்றையாவது நீங்கள் செய்கிறீர்களா என்று யோசித்துப் பாருங்கள். இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும். இப்போது உண்மை புரிகிறதா?
இது இல்லாமல், பெண்களின் புலம்பல்களுக்கு வேறு பல காரணங்கள் கூட இருக்கலாம். அப்படி ஏதாவது வேறு காரணங்கள் இருந்தால் அதையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டியது உங்கள் கடமையாகிறது.
இது பெண்கள் சார்பாக எழுதப்பட்டது அல்ல... உண்மையில் நடக்கும் நிகழ்வின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான்.