Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு‌த்த‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு

Advertiesment
மு‌த்த‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகைக‌ள் உ‌ண்டு
, வெள்ளி, 19 மார்ச் 2010 (12:55 IST)
பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன.

மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக அ‌ன்‌பி‌ன் அடையாளமாக‌க் கருத‌ப்படு‌கிறது. மு‌த்த‌ம் எ‌ன்பதை பொதுவாக அ‌திகமாக‌ப் பெறுவது குழ‌ந்தைக‌ள்தா‌ன். குழ‌ந்தைகளு‌க்கு பெ‌ற்றவ‌ர்க‌ள் முத‌ல், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள் என பலரு‌ம் மு‌த்த‌த்தை வழ‌ங்குவா‌ர்க‌ள்.

இவை அ‌ன்‌பி‌ன் அடையாள‌ம். அடு‌த்தபடியான காதல‌ர்க‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம் ம‌ற்று‌ம் த‌ம்ப‌திக‌ள் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் மு‌த்த‌ம்.

WD
மு‌த்த‌த்‌தி‌ல் எ‌த்தனையோ வகை உ‌ள்ளது. கை, நெ‌ற்ற, க‌ண்ண‌ம், தலை, உதடு என உட‌லி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் மு‌த்த‌மிட‌ப்படு‌கிறது. ஒ‌வ்வொருவரு‌ம் த‌ங்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் அ‌ன்யோ‌ன்ய‌த்‌தி‌‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம், மு‌த்த‌மிடு‌ம் சூ‌ழ்‌நிலை‌‌யி‌ன் அடி‌ப்படை‌யிலு‌ம் மு‌த்த‌மிடு‌கி‌ன்றன‌ர்.

அதே‌ப் போல, ஒரு ஆ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு‌ம், பெ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு‌‌ம் ‌நிறைய வேறுபாடுக‌ள் இரு‌ப்பதாக‌க் கூற‌ப்படு‌கிறது.

அதாவது, ஒரு ஆ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு அடு‌த்த ‌நிலை காமமாக இரு‌க்கு‌ம். ஒரு பெ‌ண் அ‌ளி‌க்கு‌ம் மு‌த்த‌த்‌தி‌ற்கு அ‌ர்‌த்த‌ம் காதலாக இரு‌க்‌கு‌‌ம் எ‌ன்பதுதா‌ன். இதனை ஒரு ஆ‌ய்வு ‌நிரூ‌பி‌த்து‌ள்ளது.

நியூயா‌ர்‌க் நக‌ரி‌ன் ப‌ல்கலை‌க்கழக‌ம் ஒ‌ன்று மு‌த்த‌மிடுதலை‌ப் ப‌ற்‌றி நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் பல சுவார‌ஸ்ய‌ங்க‌ள் வெ‌ளியா‌கியு‌ள்ளன.

இ‌ந்த ஆ‌ய்வு முடிவுக‌ளி‌ல் வெ‌‌ளியான பல உ‌ண்மைக‌ள், பல த‌ம்ப‌திய‌ர் உண‌ர்வு‌ப் பூ‌ர்வமாக உண‌ர்‌ந்து இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது அடு‌த்த ‌விஷய‌ம்.

ச‌ரி ஆ‌ய்‌‌வி‌ன் முடி‌வி‌ல் த‌ெ‌ரிய வ‌ந்தது எ‌ன்ன, மு‌த்த‌த்‌தி‌ற்கு‌ப் பெ‌ண்க‌ள் கொடு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை ஆ‌ண்க‌ள் கொடு‌ப்ப‌தி‌ல்லை எ‌ன்பதுதா‌ன் அ‌தி‌ல் ‌பிரதான ‌விஷயமாகு‌ம்.

webdunia
WD
மேலு‌ம், பெ‌ண்க‌ள், த‌ங்களது இணையுடனான இ‌ன்ப வா‌ழ்‌க்கை‌யி‌ல் மு‌த்த‌த்தையு‌ம் ஒரு அ‌ங்கமாக எ‌ண்ணு‌கி‌ன்றன‌ர். அதே‌ப்போல, த‌ங்களது அ‌ன்பையு‌ம், ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், த‌ங்களது ‌நீ‌ண்ட கால உற‌வி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டையு‌ம், த‌ம்ப‌திகளு‌க்கு‌ள்ளான உற‌வி‌னை புது‌ப்‌பி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம் பெ‌ண்க‌ள் மு‌த்த‌த்தையே அடி‌ப்படையாக வை‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றனரா‌ம்.

ஆனா‌ல், ஆ‌ண்களை‌ப் பொறு‌த்தவரை மு‌த்த‌ம் எ‌ன்பது தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் இணைய‌ப் போவத‌ற்கான ஒரு சா‌வி ம‌ட்டுமே. காம‌த்‌தி‌ன் துவ‌க்கமாக ம‌ட்டுமே மு‌த்த‌த்தை‌ ஆ‌ண்க‌ள் ‌நினை‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆ‌ண்களு‌ம் ச‌ரி, பெ‌ண்களு‌ம் ச‌ரி மு‌த்த‌த்தை அ‌திகமாக ர‌சி‌க்‌கி‌ன்றன‌ர் எ‌ன்ற போது‌ம், பெ‌ண்களே அத‌ற்கு அ‌திக மு‌க்‌‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்‌கி‌ன்றன‌‌ர்.

நாளாக ஆக, மு‌த்த‌ம் எ‌ன்பது ஒரு ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌கிறது ஆ‌ண்களு‌க்கு. ஆனா‌ல் பெ‌ண்களு‌க்கு அ‌ப்படி அ‌ல்ல. எ‌ப்போதாக இரு‌ந்தாலு‌ம் மு‌த்த‌ம் ஒரு பு‌த்துண‌ர்வை அ‌ளி‌க்கு‌ம் ‌விஷயமாகவே உ‌ள்ளது. தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ன் போது மு‌த்தமே இ‌ல்லாம‌ல் முழுமை பெற ஆ‌ண்களா‌ல் முடியு‌ம். ஆனா‌ல் ஒரு பெ‌ண்ணா‌ல் மு‌த்த‌மி‌ல்லாத தா‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ல் ‌நிறைவு பெற முடியாது.

இ‌ப்படி மு‌த்த‌‌ம் ப‌ற்‌றிய ‌ஆ‌ய்‌வி‌ல், ஆணு‌க்கு‌ம், பெ‌ண்ணு‌க்கு‌ம் இரு‌க்கு‌ம் ‌வி‌த்‌தியாச‌ம் வெ‌ளி‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதனை பல த‌ம்ப‌திகளு‌ம் ‌நி‌ச்சயமாக ஒ‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌‌ன்று தெ‌ரி‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil