Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பச்சை நிறமே பச்சை நிறமே

அலைபாயுதே

பச்சை நிறமே பச்சை நிறமே

Webdunia

படம் : அலைபாயுதே குரல் : ஹரிஹரன், கிளின்டன்
பாடல் : பச்சை நிறமே பச்சை நிறமே இயற்றியவர் : வைரமுத்து

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்ட
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்ட

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறம
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தரும
பச்சை நிறமே பச்சை நிறமே எனக்கு சம்மதம் தரும
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தரும

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்க
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம
எல்லா சிவப்பும் உந்தன் கோபம் எல்லா சிவப்பும் உந்தன் கோபம
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள
தங்கத்தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள
மஞ்சள் மஞ்சள் மஞ்சள
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்ட
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்ட

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறம
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறம
வெயிலில் பாடும் குயிலின் நிறம
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறம

சகியே ஸ்நேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்ட
சகியே ஸ்நேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்ட

வெள்ளை நிறமே வெள்ளி நிறமே....
மழையில் முளையு தும்பை நிறமே....
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறம
மழையில் முளையு தும்பை நிறமே உனது மனசின் நிறம
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறம

Share this Story:

Follow Webdunia tamil