இசை : தேவா
பாடல்: அடிக்கிற கை அணைக்குமா
குரல்: ஹரிணி
அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே
அடிக்கிற கை அணைக்குமா
உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே
உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே
சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம்
(அடிக்கிற)
போகாதே போகாதே தாபம் வீணாச்சே
கண்ணங்கள் வென்னீர் ஆயாச்சே
அடிக்கிற கை அணைக்குமா
என்மேனி என்மேனி வேர்வை சொட்டாதோ
அன்போடு உன்னைத் திட்டாதோ
அடிக்கிற கை அணைக்குமா
பார் எந்தன் கண்ணை உன் பருவப் பழத்தினிலே
போர் செய்ய வந்தஎன் ஒரு புரட்சிப் பெண்ணிவளே
நீயும் நானும் சேரும் இந்நேரம் இதழ் ஈரம்
(அடிக்கிற)
பூங்காற்றே பூங்காட்றே என்னைக் கொல்லாதே
என் நெஞ்சை மேலும் கிள்ளாதே
அடிக்கிற கை அணைக்குமா
தாங்காதே தாங்காதே பெண்மை தாங்காதே
தழுவாமல் உயிரை வாங்காதே
அடிக்கிற கை அணைக்குமா
நான் வங்கத் தோணி இதில் நீயே என் பயணி
வா என்னைக் கவனி இவள் மடிமேல் நீ பவனி
தோளும் தோளும் கூடு என்னோடு கலந்தாடு
(அடிக்கிற)