விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் புதுமணத் தம்பதிகளுக்கு, தங்களது தேனிலவைப் புதுமையாகக் கொண்டாட ஒரு அறிய வாய்ப்பு.
ஆம், ஈராக் அதிபர் சதாம் உசேனின் கட்டிலில் தேனிலவைக் கொண்டாட அந்நாட்டு அரசு சுற்றுலா திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.10 ஆயிரம் கொடுத்தால் போதும், சதாம் உசேன் படுத்து உறங்கிய படுக்கையில் தம்பதிகள் தங்களது தேனிலவைக் கொண்டாடலாம்.
இந்த கட்டணம் ஒரு இரவுக்குத்தான். புதுமணத் தம்திகளுக்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள ஹில்லா நகரில் சதாம் உசேனுக்கு சொந்தமான அரண்மனை ¦போன்ற மாளிகை உள்ளது.
இந்த மாளிகையை சுற்றுலா பயணிகளுக்கு திறந்து விட அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் தேனிலவுத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.