ஜோயில் என்பவர் எழுதிய கவிதைகளில் சில
உனக்காக
கவிதை எழுதினேன்
கவிஞனென்றார்கள்
பூக்களை ரசித்தேன்
ரசிகனென்றார்கள்
உனது
வரவிற்காய் காத்திருந்தேன்
காவளாளியென்றார்கள்
உனது
குரலைக் கேட்க தவமிருந்தேன்
முனிவரென்றார்கள்
உனக்காக
இதையெல்லாம் செய்த என்னைத்தான்
நீ
கிறுக்கன் என்கிறாய்.