பாகிஸ்தானில் உள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள் அங்கேயே குடும்பம் நடத்த துவங்கிவிட்டனர்.
பாகிஸ்தானில் காதலித்து திருமணம் செய்யும் தம்பதிகளை அவர்களது பெற்றோர்களே கொலை செய்து விடுவது வாடிக்கையான விஷயம்.
இந்த நிலையில் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பர்வேஸ் சச்சார், அவரது பழங்குடி இனத்திற்கு எதிரான பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஹியூமெரா கம்போவை காதலித்தார்.
இருவரது காதலும் மலர்ந்து மணம் வீசும் வேளையில் குடும்பத்தாரின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் ஊரை விட்டு ஓடி வந்து கராச்சி நகரில் உள்ள காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
அவர்களை காவல்நிலையத்தின் ஒரு பகுதியிலேயே தங்கிக் கொள்ள காவலர்கள் அனுமதித்ததை அடுத்து அவர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
கடந்த 4 மாதங்களாக காதலர்கள் அங்கு தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். இன்னும் எவ்வளவு காலம் அவர்கள் அங்கேயே தங்கி இருக்கப்போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி?