பூங்கா என்றால் அங்கு காதல் ஜோடிகளும் வருவார்கள். ஆனால், காதல் ஜோடிகள் மட்டும் வருவதற்கு என்று ஒரு பூங்கா அமைந்தால் அது எப்படி இருக்கும். காதலர்களுக்கு நினைத்தாலே ஆனந்தமாக இருக்குமே?
ஆனால் இந்த ஆனந்தம் நம் நாட்டு மக்களுக்கு அல்ல, இலங்கை வாழ் காதலர்களுக்கு மட்டும்தான்.
இலங்கையில் அடுத்த ஆண்டிற்குள் காதலர்களுக்கு என்று ஒரு பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் அருகில் ஓடிக் கொண்டிருக்கும் நதியின் கரையோரத்தில் இந்த பூங்காவை அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.இந்த பூங்காவிற்கு சிறுவர், சிறுமியர்கள் வர தடை விதிக்கப்படும். ஆனால் வயது உச்ச வரம்பின்றி யார் வேண்டுமானாலும் தங்களது இணையுடன் இங்கு வரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை.முதலில் ஒரு பூங்காவைத் துவக்கி அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து நாட்டின் சில இடங்களில் இதுபோன்ற பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.தங்களது காதல் உணர்வை பொது இடங்களில் வெளிப்படுத்துவதை கலாச்சார சீர்கேடாகக் கருதம் இலங்கையில், முத்தமிட்டுக் கொள்ளும் காதலர்கள், காதல் உணர்வை வெளிப்படுத்திய காதலர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.இந்த பிரச்சினையை சரி செய்ய என்ன செய்வது என்று யோசித்த அரசுக்கு வந்ததுதான் காதலர்களுக்கு என்று தனி பூங்கா திட்டம். இதுபோன்ற காதலர்களுக்கு என தனி பூங்காவை அமைத்துக் கொடுத்துவிட்டால் அவர்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறது அரசு.இதற்கு பலதரப்பட்ட மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுவதும் சகஜம்தானே.