Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல‌ர் ‌தின‌ம் : ரோஜா‌க்க‌ள் ஏ‌ற்றும‌தி!

காதல‌ர் ‌தின‌ம் : ரோஜா‌க்க‌ள் ஏ‌ற்றும‌தி!
, புதன், 21 ஜனவரி 2009 (11:49 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு நிறுவனமான டிட்கோ, 50 லட்சம் ரோஜாக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

காதலர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தும்போது‌ம், காதலரை ச‌ந்‌தி‌க்கு‌ம்போது‌ம் ரோஜா பூக்களை கொடு‌ப்பது வழ‌க்க‌ம். அதனா‌ல் எ‌ப்போதுமே ரோஜா பூ‌க்களு‌க்கு மவுசு அ‌திக‌ம்தா‌ன்.

பி‌ப்ர‌வ‌ரி மாத‌ம் 14ஆ‌ம் தே‌தி காதல‌‌ர் ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், உலக‌ம் முழுவதுமே ரோஜாவு‌க்கு ‌கிரா‌க்‌கி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நாடுகளுக்கு ரோஜா பூக்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு நிறுவனமான டிட்கோவின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் எஸ்.ராமசுந்தரம் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

டிட்கோ மற்றும் எம்.என்.ஏ. அமைப்பினர் இணைந்து டேன்புளோரா இன்ப்ராஸ்ட்ரக்சர் பார்க் லிமிட்டெட் (டேன்புளோரா-தமிழ்நாடு மலர் கட்டமைப்பு பூங்கா) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி, ஓசூர் தாலுகாவில் உள்ள அமுதாகொண்டபள்ளி என்ற இடத்தில் தமிழக அரசு, தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் உதவியுடன் பெரிய ரோஜா தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அங்கு ஆண்டுக்கு பல கோடி ரோஜாக்கள் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் `டேன்புளோரா' 1 கோடியே 20 லட்சம் ரோஜாக்களை உற்பத்தி செய்தது. அது இந்த ஆண்டில் இரு மடங்காக அதாவது, 2 கோடியே 50 லட்சமாக உயரும் என கருதப்படுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு, இங்கிலாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 50 லட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதில், `தாஜ்மகால்' என்கிற, காதலர்கள் அதிகம் விரும்புகிற, கருஞ்சிவப்பு நிறத்தில் கருப்பு கோடுகளுடன் கூடிய புதிய வகையை சேர்ந்த 10 லட்சம் ரோஜாக்களும் அடக்கம்.

Share this Story:

Follow Webdunia tamil