காதல் என்பது.. எப்போது இருவர் ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்து வாழ முடியாமல் போகிறதோ, தங்களது வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள நினைக்கின்றார்களோ அப்போது உருவாவதுதான்.
ஒருவருக்கொருவர் கருத்தொற்றுமை இல்லாவிட்டால் அது காதல் இல்லை.
இதயத்திற்கு ரத்தமாகும், உடலுக்கு தண்ணீராகவும் இருப்பது காதல்.
காதல் என்பது அழகான கனவு.
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் விவரிக்க முடியாத அளவிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
காதல் என்பது போரைப் போன்றது. துவக்குவது எளிது. முடிப்பது கடினம்.
காதல் மகிழ்ச்சியை அளிக்குமேத் தவிர மகிழ்ச்சியாக இருக்க விடாது.
காதல் இதயத்தில் இருந்து வர வேண்டும். கண்களில் இருந்து அல்ல.
காதலிப்பதை விட ஏதாவது சிறந்த பொருள் ஒன்று இருந்தால் அது காதலிக்கப்படுவதாக இருக்கும்.
காதல் இதயத்தை கனக்கச் செய்துவிட்டு மூளையை காலியாக்கிவிடும்.
சில சமயம் கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை இதயம் பார்க்கும். அதுதான் காதல்.
காதலில் விழுவதற்கு புவியீர்ப்பு சக்தியின் பங்கு ஏதும் இல்லை.
காதல் காதல் தான். அது எப்போதும் சாயம் போவதில்லை.
காதலுக்காக உயிரிழப்பவர்களும் உண்டு, காதலை இழந்ததால் உயிரிழப்பவர்களும் உண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்க வைக்க முடியும்.
காதல் என்பது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை வரும் சலுகை.