Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ன்று முத‌ல் காத‌ல் வ‌ங்‌கி துவ‌க்க‌ம்

இ‌ன்று முத‌ல் காத‌ல் வ‌ங்‌கி துவ‌க்க‌ம்
, சனி, 13 பிப்ரவரி 2010 (14:33 IST)
சென்னையில் இன்று பாலியல் மாநாடு மற்றும் காதல் வங்கி தொடக்க விழா நடைபெற உ‌ள்ளது. திருமணத்தின் போது இருக்கும் காத‌ல் உண‌ர்வு இறுதி வரை நீடிக்க காதல் வங்கி பயன்படும் என்று மாநாட்டு தலைவர் டாக்டர் காமராஜ் கூறினார்.

இது கு‌றி‌த்து சர்வதேச பாலியல் மாநாட்டின் அமைப்புக்குழு தலைவர் டாக்டர் டி.காமராஜ் கூறுகை‌யி‌ல், இந்தியன் அசோசியேஷன் பார் செக்சாலஜி, இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் செக்சுவல் மெடிசன் மற்றும் சென்னை பல்கலைக்கழக உளவியல் துறை, மானுடவியல் துறை ஆகியவை இணைந்து 5-வது சர்வதேச பாலியல் மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாடும், இந்தியாவில் முதல்முறையாக தொடங்கப்படும் காதல் வங்கியின் அறிமுக விழாவும் இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) சென்னையில் நடக்கிறது.

30 வயது வரை உள்ள ஆண், பெண்கள் 20 சதவீதம் பேர் பாலியல் பிரச்சினையுடன் இருக்கிறார்கள். 50 வயதில் இது 40 சதவீதமாக அதிகரிக்கிறது. இதை சரி செய்ய இந்தியாவில் போதுமான பாலியல் மருத்துவர்கள் இல்லை. பாலியலுக்காக தனி மருத்துவ பட்டமும் இந்தியாவில் இல்லை.

எனவே புதிய சிகிச்சை முறைகள், மருந்துகள், புதிய அறுவை சிகிச்சைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை குறித்து உலக அளவிலான பாலியல் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாட இந்த மாநாடு நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 மருத்துவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். பலர் ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பிக்கிறார்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலமாக மூளையின் எந்த பகுதியில் அன்பு, காதல், வெறுப்பு இருக்கிறது. இதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்றெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

திருமணத்தின் போதும், காதலிக்கும் போதும் இருக்கும் `ரொமான்ஸ்'சை வாழ்நாள் முழுவதும் கொண்டு போக முடியாதா? அதற்கு சில விதிகளை கடைபிடித்தால் கொண்டு செல்ல முடியும்.

1. காதலை அதிகரிப்பது எப்படி? 2. காதலை இழக்காமல் இருப்பது எப்படி? 3. காதலுக்கு நேரம் ஒதுக்குவது, வாரத்திற்கு 15 மணி நேரமாவது ஒதுக்க வேண்டும். 4. காதலுக்கு நேர்மை மிகமிக முக்கியம். 5. காதலுக்கு இருவரும் இணைந்து தான் முடிவு எடுக்க வேண்டும்.

இந்த காதல் வங்கியில் இணைபவர்களுக்கு இந்த பிரச்சினைகளில் தீர்வு காணும் வகையில் மாதம் ஒரு முறை வகுப்புகள் நடத்தப்படும். இதில் காதலர்கள், திருமணமானவர்கள் என பெரியவர்கள் மட்டும் ஆண், பெண் இருபாலரும் சேரலாம். வயதானவர்களுக்கும் எந்த தடையும் இல்லை. 90 சதவீதம் இதில் வெற்றி கிடைக்கும். வருடத்திற்கு 50 ஆயிரம் பேர் வரை பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறோம்.

காதல் வங்கியின் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு ஓட்டல் கிரீன் பார்க்கில் நடக்கிறது. சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைக்கிறார். இதில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் எ‌ன்று டாக்டர் காமராஜ் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil