Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இவை பேசக் கூடாத விஷயங்கள்

Advertiesment
இவை பேசக் கூடாத விஷயங்கள்
, புதன், 30 செப்டம்பர் 2009 (10:16 IST)
webdunia photo
WD
ஒருவர் தான் விரும்பும் பெண்/ஆணிடம் பேசக் கூடாத விஷயங்கள் என்று சில உண்டு. அதாவது கேட்கக் கூடாத கேள்விகள் என்று கூறலாம்.

ஒரு சிலர் எப்போதும் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அது தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமாக இருந்தாலும், பழக ஆரம்பித்த புதிதில் இதுபோன்ற கேள்விகள் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை மட்டும் ஆரம்பத்தில் கேட்டுவிடாதீர்கள்.

அதாவது, நீங்கள் என்ன ஜாதி? முதலியாரா?

எதுக்காக முடியை ட்ரிம் பண்ணியிருக்கீங்க?

உங்களுக்கு காதல்னா பிடிக்காதா?

உங்க வீடு எங்கே இருக்கு?

இந்த ஆபிஸ்ல சம்பளம் நல்லா தருவாங்களா?

உங்க அப்பா என்னவா இருக்காறு? கோபக்காரரா?

இந்த கேள்விகள் அனைத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது இவைகள் அனைத்தும் ஒருவரது தனிப்பட்ட விஷயங்கள் பற்றிய கேள்வியாகும்.

தன்னைப் பற்றிய எந்த விஷயத்தையும், ஒரு பெண் நன்கு அறிமுகமில்லாத ஒருவரிடம் சொல்வதற்கு தயாராக இருக்க மாட்டார்கள். அதிலும் இதுபோன்ற கேள்விகளை கேட்பவர்கள் மீதும், நாகரீகமற்றவர் என்ற முத்திரை குத்தப்படும்.

இதனை சிலர் விசாரணையாகக் கூட எண்ணிக் கொள்ளலாம். எனவே பேசிப் பழக ஆரம்பித்த சிறிது நாட்களில் இதுபோன்ற கேள்விகளை நிச்சயமாக தவிர்த்து விடுவது நல்லது.

மேலும், சந்திப்பின் முதல் நாளிலேயே சுய புராணம் பாடுவதும் தவறு, அடுக்கடுக்காக கேள்விகள் கேட்பதும் தவறு. பொதுவாக விஷயங்களைப் பற்றி எளிதாகப் பேசினால் உங்கள் காதலும் எளிதாக வளரும். இல்லையேல் கள்ளிச் செடியில் பூத்த மலராகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil