திருமணத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை வெளிநாட்டினர் செய்து கொண்டேதான் இருப்பார்கள் போலும்.
வானத்தில் பறந்த படி திருமணம், இணையத்தில் திருமணம், சுயம்வரம் என்று பல விதங்களில் தங்களது திருமணத்தை செய்தியாக்க விரும்பும் மணமக்களில் இவர்களும் இணைந்துள்ளனர்.
அதாவது, சீனாவைச் சேர்ந்த லின் ரோங், தனது திருமணத்தின் போது அணிந்திருந்த உடை 2.25 கி.மீ. நீளம் கொண்டதாக இருந்தது. இந்த ஐடியாவைக் கொடுத்ததே மணமகன் ஜாகோதான்.
ஒரு நாளிதழில், ஒரு கி.மீ. நீளம் கொண்ட திருமண உடை அணிந்து திருமணம் என்ற செய்தியைப் படித்த ஜாகோவிற்கு தனது திருமணத்தின்போதும், மணமகள் மிக நீண்ட ஆடையை அணிய வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
அதன்படி, தனது மனைவியாக வரப்போகிறவருக்கு சுமார் 1 லட்சம் செலவில் 2.25 கி.மீ. நீளமுள்ள ஆடையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்த ஆடையை உருவாக்குவதில் ஜாகோவின் பெற்றோருக்கு அந்த அளவிற்கு ஆர்வம் இல்லை. எனினும், தனது மற்றொரு உறவினருடன் சேர்ந்து ஜாகோ இந்த உடையை உருவாக்கியுள்ளார்.
சுமார் 3 மாதங்கள் உழைத்து இந்த ஆடை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்கவும் ஜாகோ விண்ணப்பித்துள்ளார்.
ம்ம்ம் திருமணத்திலேயே ஜமாய்ச்சுட்டீங்க போங்க.